செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2020 (12:09 IST)

சாட்டிலைட் போன், துப்பாக்கி, 500 கோடி போதை பொருள்! – தூத்துக்குடியில் சிக்கிய மர்ம படகு!

தூத்துக்குடி அருகே கடல் பகுதியில் ரூ.500 கோடி மதிப்புடைய போதை பொருளை கடத்தி வந்த படகை கடலோர காவல்துறையினர் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கடற்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுறுவல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வழக்கம்போல கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது இலங்கை வழியாக அனுமதியின்றி வந்த படகு ஒன்றை மடக்கி பிடித்த அவர்கள் அதில் வந்தவர்களை கைது செய்துள்ளனர். படகை சோதனை செய்ததில் காலி டீசல் டேங்கிற்குள் சுமார் 100 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடுத்துள்ளனர்.

மேலும் சோதனை செய்ததில் 3 கிலோ க்ரிஸைல் மெத்தலின் பீட்டாமைன் என்ற போதை பொருளும், 5 துப்பாக்கிகளும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல்படையின, படகில் வந்தவர்களையும் கைது செய்துள்ளனர். கிலோ கணக்கில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததால் அவர்களுக்கு பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.