Daily Horoscope

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்; தமிழக அரசு இடைக்கால மனு

Updated: திங்கள், 7 மே 2018 (15:27 IST)
உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் பெரும் அளவில் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கர்நாடகாவில் நடக்க உள்ள தேர்தலை காரணம் காட்டி வருகிறது. 
 
ஆனால் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
 
4 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா இந்த மாதம் தண்ணீர் திறந்து விட இயலாது என்று தெரிவித்துவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

எல்லாம் காட்டு

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டால் வாபஸ் பெறுவோம்.. திரிணமூல் அதிருப்தி அணி அறிவிப்பு...

வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லையென்றால், அதே மொழியில் பதில் சொல்வோம்: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. இன்று ஒரே நாளில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்...

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை...

ஜெயிலில் இருக்கும் முன்னாள் பிரதமர் பேரன் ஆபாச படம் பார்த்தாரா? பெங்களூரு பரப்பன அக்ஹார சிறை அதிகாரி சஸ்பெண்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments