திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 31 அக்டோபர் 2022 (15:46 IST)

நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழக காவல்துறை அனுமதி

rally
நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் தடை விதித்து அதற்கு பதிலாக வேறொரு தினத்தில் ஊர்வலம் நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு தமிழக டிஜிபி அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது 
 
எனவே தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva