புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (07:53 IST)

தலைமைச் செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் டெல்லிக்கு திடீர் அழைப்பு: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக இபாஸ் ரத்து செய்ய வேண்டும் என்றும் நீட்தேர்வுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை
 
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் நேற்று திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனித்தனி விமானங்களில் டெல்லி சென்ற உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ் கே பிரபாகர், தமிழக முதல்வரின் செயலாளர் செந்தில்குமார், தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு திடீரென டெல்லி அழைப்பு விடுத்துள்ளது
 
இந்த அழைப்பை ஏற்று அதிகாரிகள் விமானங்கள் மூலம் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் இன்று தமிழக அரசின் அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என்றும் இந்த ஆலோசனையின்போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் திடீரென டெல்லி சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது