வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2020 (20:04 IST)

ரூ. 6 க்கு ஹெட்போன், டெம்பர் கிளாஸ்... கடையில் கூடிய மக்கள் கூட்டம் ! சீல் வைத்த அதிகாரிகள்

இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பம் சார்ந்த பொருள்களுக்கு ஏகப்பட்ட டிமாண் உள்ளது.  அதை நிரூபிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு செல்போன் கடையில் ரூ.  6 க்கு  ஹெட்போன் மற்றும் டெம்பர் கிளாஸ் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதையொட்டி முதலில் வரும் 100 நபர்களுக்கு இந்த ஆஃபர் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் குறைந்த விலையில் பொருட்களை வாங்க மக்கள் திரண்டனர். மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை  எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசின் அனுமதியை மீறி கடைக்கு  முன் கூட்டத்தைக் கூட்டியதற்காக கடையில் உரிமையாளருக்கு அபராதம் விதித்ததுடன்,  கொரொனா வைரஸை பரப்பும் விதத்தில் செயல்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகள். அக்கடைக்குச் சீல் வைத்தனர்.