Daily Horoscope
✕

அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 9 ஜூன் 2023 (10:17 IST)
அனுமதி இன்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கோவையில் பேனர் விழுந்து மூன்று பேர் பலியான நிலையில் விளம்பர பலகைகள் விவகாரத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி திருத்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி உரிமை பெறாமல் பேனர் வைக்க கூடாது. அனுமதி இன்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 
 
பேனர் விளம்பர பலகைகள் வைப்பதில் விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். உரிமைக்காலம் முடிந்த பின்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும். 
 
பேனர் உள்ளிட்டவற்றால் உயிரிழப்பு நேர்ந்தால் அதனை வைத்த நிர்வாகம் அல்லது தனிநபர் தான் இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம்...

இன்று டெல்லியில் புதிய போராட்டம்.. ஜந்தர் மந்தரில் மீண்டும் பரபரப்பு..

ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய ஐபேட் மினி 8.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

சவுதி அரேபியா விமான நிலையத்தில் கடும் தாக்குதல்.. 12 பேர் பலி.. ஹூதி அமைப்பினரின் சதியா?

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

அடுத்த கட்டுரையில்
Show comments