1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayakanth case, chennai high court new order

விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு குறித்து பதில் அளிக்க  தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டுள்ளது
 
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2015ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக,  அவைக்குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதாக சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது!
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நாளை முதல் கட்டணம் தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு