வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (17:13 IST)

விதிமுறையை மீறி அரசு நடத்தும் மணல் கொள்ளை - வீடியோ

கரூரில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

 
இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கரூர், மண்மங்கலம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி ஆகிய 6 தாலுக்காக்களை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனும், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்ள வில்லை. 
 
எனவே குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் கலந்து கொண்டார். விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் புதிய தொழில்நுட்ப நடவு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஆங்காங்கே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும், விவசாய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். 
 
அப்போது., கரூர் மாவட்டம், குளித்தலை மணத்தட்டை பகுதியில் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி, சட்டவிரோதமாக மணல் கொள்ளையை அரசே நடத்துகின்றது என்றும், அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து போராடியர்கள் மீது வழக்கு போடப்படுவதோடு, பெண்கள் என்றும் பாராமல் அவர்களையும் சிறையில் தள்ளுவதாகவும் கூறி, அப்பகுதி விவசாயிகள் மற்றும் காவிரி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
 
விவசாயிகளுக்கு போதிய நீர் கிடைக்க காவிரி ஆற்றில் மணல் கொள்ளை அரசே நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் மற்றும் காவிரி ஆற்று பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். 
 
மேலும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன். இங்குள்ள மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கரூர் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் அமைச்சர் வருகை தரும் போது உடன் செல்கின்றனரே, தவிர, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்றும் அதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, கரூர் அருகே உள்ள குளித்தலையில் மணல் குவாரி இயக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடைவிதித்தும், இங்குள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் கடந்த ஒன்றாம் தேதி முன் தினந்தோறும் சுமார் 3 ½ கோடி மதிப்பிலான மணல் கடத்தப்பட்டு வருகின்றது. 
 
ஆகவே, அதற்கு இங்குள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் துணை போவதாகவும், தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் அவரின் துணையோடு மணல் கொள்ளை போவதாகவும் முகிலன் குற்றம் சாட்டினார். மேலும், அதிகாரிகளே சட்டவிரோத மணல் கொள்ளை என்று அறிவித்தும்., தமிழக முதலமைச்சர் துணையுடன் நடைபெறுவதால், இங்குள்ள அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
பேட்டி : முகிலன் – ஒருங்கிணைப்பாளர் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்
 
-சி. ஆனந்தகுமார்