வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மே 2021 (11:47 IST)

ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆக்ஸிஜன் வசதி படுக்கை! – தமிழக அரசு முடிவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது

இந்நிலையில் ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்பாடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒரு பேருந்தில் 10 படுக்கை வரை அமைக்க முடியும் என்பதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையை சரிசெய்ய இயலும் என கூறப்படுகிறது.