கே.பி.பார்க் குடியிருப்பு விவகாரம்; சரிசெய்ய 45 நாட்கள் அவகாசம்! – தமிழக அரசு உத்தரவு!
சென்னை கே.பி.பார்க்கில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடியிருப்பை சரிசெய்ய கட்டிட நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கே.பி.பார்க் பகுதியில் தமிழக வீட்டு வசதி வாரியத்தின் நிதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் உரிந்து விழுந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் கே.பி.பார்க் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கட்டிட ஒப்பந்தத்தை ஏற்ற நிறுவனத்திற்கு தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி தரமற்ற முறையில் கட்டப்பட்ட கட்டிடத்தின் குறைபாடுகளை 45 நாட்களுக்குள் சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.