1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (10:23 IST)

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை அடுத்து ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியருக்கான தொகுப்பூதியம் 12000 ஆகவும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 15,000 உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது 
 
மேலும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் 18000 ஆக உயர்வு என்றும் இது குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து அவர்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran