வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (12:05 IST)

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடையாது..!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் தமிழக அரசு அறிவிக்க உள்ள நிலையில் யார் யாருக்கெல்லாம் இந்த தொகை கிடைக்கும்? யார் யாருக்கு எல்லாம் கிடைக்காது என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது 
 
வருமானவரி செலுத்தும் பெண்கள், மத்திய மாநில அரசு பணியில் இருக்கும் பெண்கள் ஆகியோர்களுக்கு மாதம் ஆயிரம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் 4 சக்கர சொகுசு வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கிடையாது என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் நிலையான மாத வருமானம் இல்லாமல் இருக்கும் கூலி வேலை பார்க்கும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், அந்தியோதயா யோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
 
குடும்ப தலைவருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கி வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran