திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:44 IST)

தனுஷின் வாத்தி பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. தனுஷ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியானது ‘வாத்தி’. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’என்ற பெயரிலும் இன்று வெளியானது. ரிலீஸூக்குப் பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை செய்யவில்லை என்றாலும், தெலுங்கில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை ஈட்டி வருகிறதாம். தெலுங்கில் மட்டும் தயாரிப்பாளருக்கு வருவாயாக 20 கோடி ரூபாய் அளவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் மார்ச் மாதம் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.