செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நீர்நிலை நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் உள்பட ஒரு சில நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் நீர் வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள், நீர்நிலைகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது.
 
இதுகுறித்து அனைத்து மாவட்ட பதிவாளர்கள் பத்திர பதிவு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே இனிவரும் நாட்களில் நீர் நிலைகளில் உள்பட நீர் நிலைகள் என வகைப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களிலும் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதுகுறித்து ஏற்கனவே சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது