பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை
பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை
பேருந்து ஓட்டுனர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான வழிகாட்டுதல் நடைமுறைகள் சற்றுமுன் வெளியிடப்பட்டு உள்ளன
அதில் ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது நடத்துனரிடம் செல்போனை கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் நடத்துநர்கள் பின்புற இருக்கையில் அமர வேண்டும் எனவும் தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது செல்போன்கள் பயன்படுத்துவதால் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது