புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (07:45 IST)

தமிழக ஆளுனர் திடீர் டெல்லி பயணம்: ஆட்சிக்கு ஆபத்தா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மக்களவை தேர்தலுக்கு பின் துக்ளக் பத்திரிகையில் அதிமுக குறித்து கடுமையான விமர்சனம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி, பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்பதால் பாஜக தலைமையின் ஒப்புதலோடுதான் இந்த விமர்சனம் வெளிவந்திருக்கும் என கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் துக்ளக் விமர்சனத்திற்கு அதிமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என அமைச்சர் ஒருவரும் பேட்டியளித்தார். இதனையடுத்து பாஜக தலைமை கடும் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் இன்று தமிழக ஆளுனர் புரோஹித் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கவிருப்பது பல ஊகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது