தமிழ்நாடு அரசு பணிபுரியும் பெண்களுக்காக அமைத்த தோழி விடுதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மேலும் 4 மாவட்டங்களில் புதிய விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.
சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் பெண்கள் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு வரும் பெண்கள் பெரும்பாலும் தனியார் பெண்கள் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழக அரசு தோழி விடுதி என்ற உணவு, உறைவிட விடுதி வசதியை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்த விடுதிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதை தொடர்ந்து மேலும் 6 இடங்களில் புதிய தோழி மகளிர் விடுதி அமைக்க ரூ.70 கோடி செலவில் தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில் 2 விடுதிகள் சென்னையிலும், 4 விடுதிகள் ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களிலும் அமைய உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K