அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துகிறது திராவிட மாடல் அரசு: முதல்வர் ஸ்டாலின்..!
அனைத்து துறைகளிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்துகிறது என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் CREDAI ரியல் எஸ்டேட் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவர் கலைஞர் என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டுமென்பதே அரசின் விருப்பம் என்றும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் தமிழ்நாடு திகழ்வதாக இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.,
புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றும், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலை வீடுகளை கிரெயார் கட்டித்தர வேண்டும் என்றும், சென்னை பெருநகரில் ஆன்லைனில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, புதிய தொழில் நிறுவனங்கள் வருகை போன்றவற்றால் வாழ்விடங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.
Edited by Mahendran