1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (12:59 IST)

அயோத்தியை அடுத்து கர்நாடகாவிலும் ராமர் கோவில் கட்டப்படும்: முதல்வர் பசவராஜ் பொம்மை

Pasavaraj Bommai
அயோத்தியில் ஏற்கனவே ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் விரைவில் கர்நாடக மாநிலத்திலும் ராமர் கோவில் கட்டப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
 
கர்நாடக சட்டப்பேரவைக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் கர்நாடக முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 
 
இந்த உரையில் அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கராம நகரத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து பாஜகவினார் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் கர்நாடகா அரசு ஏற்கனவே கடந்த பட்ஜெட்டின்போது கொடுத்த வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றவில்லை சித்ராமையா கூறிய நிலையில் சட்டமன்றத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது 
 
Edited by Mahendran