திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:01 IST)

பள்ளிகள் திறப்பது எப்போது? நாளை அறிவிக்கின்றார் முதல்வர்!

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நவம்பர் 16 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது
 
ஆனால் அதே நேரத்தில் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு, அந்த கருத்துக்கணிப்பின்படி தான் பள்ளிகள் திறப்பது முடிவு செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்டனர். இந்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு அறிக்கை தயார் செய்து முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற அறிவிப்பை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் நாலை பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முதல்வர் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று பள்ளி கல்லூரி மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்