புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:52 IST)

தமிழக காவல்துறையில் பணியிடங்கள் நிரப்புதல்; தரம் உயர்த்தல்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக ஆண்டு பட்ஜெட்டில் காவல்துறையில் பணியிடங்களை நிரப்பி தரம் உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளை வாசித்து வரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காவல்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.8,930.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 14,317 காவல் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.