திருவாரூர் ஆழி தேரோட்டம் நடைபெறும் தேதி: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
உலகப் புகழ் பெற்ற திருவாரூர் கோவில் ஆழி தேரோட்டம் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில் உள்ள தேர், ஆசியாவில் மிகப்பெரியது என்பதும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தை காண வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆழித் தேரோட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு தேரோட்ட விழாவிற்கான பந்தக்கால் விழா இன்று நடைபெற்றது.
இந்த பந்தக்கால் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் கோவில் தேரோட்டத்திற்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva