வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (12:44 IST)

அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் புதிய மாற்றம்

ராணுவத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில்  நுழைத்தேர்வு எழுத வேண்டும் என செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவம், விமானம், கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகள்  பணியாற்றுவதற்கு, அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இதில், விண்ணப்பிப்பவர்கள் உடற்தகுதி, மருத்துவத் தகுதி, பரிசோதனை ஆகியவற்றியில் தொடர்ந்து, பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமென முன்பு கூறப்பட்டது.

இதில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறாது.  அதன்படிம் முதலில் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் ஆன்லைனில் தேர்வு எழுத வேண்டும், அதன்பின், உடற்தகுதி தேர்வு, இறுதியாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் தேர்வுகள் 200 மையங்களில்  நடத்தப்படும் என்றும், 2023-24 ஆம் ஆண்டில் ராணுவத்தில் சேர விண்ணப்பத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் இப்புதிய முறை பொருந்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.