1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (10:49 IST)

திருவண்ணாமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்!

Train
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை திருவிழாவிற்கு செல்ல சென்னையிலிருந்து புறநகர் ரயில்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ம் தேதி திருகார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் நடந்து நாள்தோறும் திருவிழா கோலமாக திருவண்ணாமலை காட்சியளிக்கும் நிலையில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல டிசம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரம் – திருவண்ணாமலை இடையே டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K