செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

திமுகவில் இணைகிறாரா தோப்பு வெங்கடாச்சலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் இப்போது திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்  ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு அளித்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் அவர் சுயேட்சையாக நின்றதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.