ஒரு கோடி பத்தாது.. இன்னும் பல கோடி கிடைக்கணும்! – யூட்யூப் சேனலை வாழ்த்திய சீனு ராமசாமி!
தமிழக கிராமத்து உணவுகளை சமைத்து ஒளிபரப்பும் வில்லேஜ் குக்கிங் சேனல் படைத்த சாதனைக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரான பெரியதம்பி தாத்தாவும், சில இளைஞர்களும் சேர்ந்து கிராமத்து சமையல் செய்யும் யூட்யூப் சேனல் ஒன்றை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கினர். அவர்களுடைய நகைச்சுவையான பேச்சும், பாரம்பரிய கிராம சமையலும் பலரை ஈர்க்கவே கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 1 கோடி சப்ஸ்க்ரைபரை பெற்ற முதல் யூட்யூப் சேனலாக டைமண்ட் கேடயத்தை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல்.
இந்நிலையில் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களை வாழ்த்தி பதிவிட்டுள்ள இயக்குனர் சீனு ராமசாமி “ஒரு கோடி விருப்பப் பார்வையாளர்கள் (subscribers) மட்டுமல்ல இன்னும் பல கோடி மக்களின் அன்பை பெறுவீர்கள். சமைக்கும் உணவை எளியோருக்கும் சமையல் கலையை நமக்கும் பகிர்ந்தளிக்கும் இந்த உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.