1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj

’’விஜய் என்னை சந்தித்தது இதற்காகத்தான்’’ ! உண்மையை உடைத்த முதல்வர் பழனிசாமி

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதால் தியேட்டரில் 50% பார்வையாளர்களிலிருந்து எண்ணிக்கையை 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி திருச்சியில் நடைபெற்ற பிரசாரத்தில் இதுகுறித்து கூறியுள்ளதாவது :

அதில், சினிமாவில் பலகோடி ரூபாய் செலவு செய்து பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் விரையில் படங்களை வெளியிட உதவு செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். விஜய் மாஸ்டர் படத்தை வெளியிட வேண்டி மட்டும் என்னைச் சந்திக்கவில்லை அனைத்துப் படங்களும் வெளியிட உதவுமாறு கேட்டுக்கொண்டார் எனத் தெரிவித்தார்.