வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (21:42 IST)

ரஜினி இலட்சியம் விஜய்யால் நிறைவேறும் ’’– ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு !

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து சென்னை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே அவர் தான் அரசியல் கட்சித்  தொடங்கப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவரது இந்த மனமாற்றத்திற்கு உடல்நிலை காரணமாக இருந்தாலும், அவரது நெருங்கிய நண்பர்களான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு மற்றும் சிரஞ்சீவி இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில்,  நடிகர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் இன்று ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில்,’’ நீங்க வாங்க தம்பி, இனி அதிசயமும் அற்புதமும் உங்களால் மட்டுமே சாத்தியம் ரஜினி சார் உங்கள் இலட்சியம் தளபதியால் நிறைவேறும்  நிச்சயம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.