1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (16:32 IST)

கையில் கடப்பாறையுடன் விஜய் சேதுபதி – வெளியான மாஸ்டர் புகைப்படம்!

நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் 8 மாத தாமதத்துக்குப் பிறகு ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர். இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனால் படத்தின் போஸ்டர்கள் மற்றும் படப்பிடிப்பு தள புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதுவரை விஜய் புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்ட நிலையில் இப்போது விஜய் சேதுபதியின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி காவி வேட்டிக் கட்டிக்கொண்டு அய்யனார் சிலைக்கு முன் கையில் கடப்பாரையுடன் நிற்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.