ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (07:46 IST)

திருவான்மியூர் ரயில்நிலைய கொள்ளை: ஊழியரே நாடகமாடியது அம்பலம்!

திருவான்மியூர் ரயில்நிலைய கொள்ளை: ஊழியரே நாடகமாடியது அம்பலம்!
நேற்று சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய ஊழியரை கட்டிப் போட்டுவிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ரயில் நிலைய ஊழியரே மனைவியுடன் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 
 
நேற்று சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய ஊழியரை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளையர்கள் ரூபாய் 1.32 லட்சம் கொள்ளை அடித்து சென்று விட்டதாக புகார் வந்தது 
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரெயில்வே ஊழியரிடம் விசாரணை செய்தனர் அப்போது ரயில் நிலைய ஊழியர் தனது மனைவியின் உதவியுடன் கொள்ளை போனதாக நாடகமானது தெரியவந்தது 
 
இதனை அடுத்து அவரது மனைவியுடன் விசாரணை செய்ய போது அது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரயில் நிலைய ஊழியர் டீக்காராம் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது