1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2026 (16:58 IST)

யாரும் தேவையில்லை!.. நான் சிங்கிளா பிரச்சாரம் செய்வேன்!.. தவெக வேட்பாளர் அட்ராசிட்டி!...

sathyakumar
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. சமீபத்தில்தான் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய் அறிவித்தார். அதில் கட்சியில் பல வருடங்கள் பணிபுரிந்த பலருக்கும் சீட் கொடுக்கவில்லை என புகார் எழுந்தது.ஒருபக்கம் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்.

இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக திருத்தணி தொகுதியில் போட்டியிடும் சத்தியகுமார் பற்றிய செய்தி இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் திருத்தணி பகுதியில் தனியாகவே நடந்து சென்று அங்கிருக்கும் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருகிறது. அந்த பகுதி தவெக நிர்வாகிகள் ஏன் அவருடன் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்கிற கேள்வி எழுந்திருக்கிறது..

விஜயின் மக்கள் இயக்கத்திலிருந்து பதவிக்கு வந்தவர்கள் மற்றும் பிற கட்சிகளில் இருந்து நல்ல வசதி வாய்ப்புகளோம், ஆதரவாளர்களோடும் வந்து தவெகவில் சீட் பெற்றிருந்தால் மட்டுமே தவெக நிர்வாகிகள் ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்களுடன் பிரச்சாரத்திற்கும் செல்கிறார்கள். ஆனால் சத்திய குமார் அப்படி வந்தவர் இல்லை.. எனவேதான், அந்த பகுதி நிர்வாகிகள் இவரை புறக்கணிக்கிறார்கள்.. மேலும் வேட்பாளரை மாற்றுமாறு அவர்கள் தலைமைக்கு கோரிக்கை வைப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

ஆனால் சத்யகுமாருக்கு ஆதரவு கொடுக்க மறுக்கும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘முதலில் சத்யகுமார் இந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை.. இந்த மண்ணின் மைந்தர் இல்லை.. ஆனாலும் தலைமை சொன்னதால் நாங்கள் அவருக்காக தேர்தல் பணிகளை செய்ய தயாராகவே இருந்தோம். அவருடன் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராகத்தான் இருந்தோம்..

ஆனால் அவரோ தேர்தல் பிரச்சாரத்திற்கு வாகனத்தை கூட எடுத்து வரவில்லை.. எங்களை சைக்கிளில் வர சொல்கிறார்.. பிரசாரத்துக்கு என்னோடு பத்து பேர் வந்தால் போதும் என்கிறார்.. யாருமே எனக்கு தேவையில்லை.. நான் தனியாக பிரச்சாரம் செய்வேன்.. ஆன்லைனில் வீடியோ போட்டு பிரச்சாரம் செய்து அதிலேயே நான் வெற்றி பெறுவேன்.. நீங்கள் யாரும் எனக்கு தேவையில்லை’ என்கிறார். அதனால்தான் அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை’ என பொங்குகிறார்கள்.