1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk leader vijay doing election compaign in trichy

திருச்சியில் இன்று விஜய் தேர்தல் பரப்புரை!.. வெற்றி கிடைக்குமா?..

vijay
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு பின் தமிழக அரசியல்வாதிகளில் இரண்டு தொகுதிகள் போட்டியிடுபவர் விஜய் மட்டுமே..

விஜய் பிரசாரம் செய்ய வந்தாலே மக்கள் கூட்டம் கூடி விடுகிறது.. தவெக போலீசிடம் அனுமதி பெற்ற எண்ணிக்கை விட அதிக மக்கள் கூடுவதால் அது தவெகவுக்கே பிரச்சினையாக மாறுகிறது.. ஒருபக்கம் அவர் பிரச்சாரத்தை முடக்குவதற்கு திமுகவினர் சில சதிகளை செய்வதாக தவெக புகார் சொல்லி வருகிறது.

சமீபத்தில் விஜய் முதலமைச்சர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கு பிரச்சாரம் செய்யசென்று வந்த போது அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும் அங்கு அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை என்பதாலும் விஜய் இரண்டு நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.. அதோடு அடுத்த வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதியில் செய்யவிருந்த பிரச்சாரத்தையும் அவர் ரத்து செய்தார். இது தொடர்பக கருத்து சொன்ன ஆதவ் அர்ஜுனா ‘10 அரசு பேருந்துகளை வேண்டுமென்று எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுத்த இடத்திற்கு திமுகவினர் கொண்டு வந்தார்கள்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே இன்று காலை விஜய் பிரச்சாரம் செய்கிறார்.. இன்று மதியம் 12:30 மணி முதல் மாலை 4 மணி வரை அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.. இன்று காலை திருச்சி செல்லும் விஜய் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. திருச்சி அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பது தவெகவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
40 சதவீத வாக்குகள்!.. 181 - 189 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்!.. லோக் போல் கருத்துக்கணிப்பு!...