1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (12:05 IST)

தமிழக அரசு ஏன் ஒரு விமானத்தைக்கூட ஏற்பாடு செய்யவில்லை? திருமாவளவன் கேள்வி

உலகெங்கும் இருக்கும் இந்தியர்களை குறிப்பாக அரபு நாட்டில் இருப்பவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர மத்திய அரசும் மாநில அரசும் பல விமானங்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்து கொண்டிருக்கிறது 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா அரசு, அரபு நாடுகளிலிருந்து சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தவர்களை அழைத்துவர 44 விமானங்களை இதுவரை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளா 44 விமானங்களை ஏற்பாடு செய்திருக்கும் போது தமிழக அரசு அரபு நாடுகளில் சிக்கி இருக்கும் தமிழர்களை அழைத்து வர இன்னும் ஒரு விமானத்தை கூட ஏற்பாடு செய்யாதது ஏன் என்ற கேள்வியை அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தனது சமூக வலைத் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: அரபுநாடுகளில் தவிக்கும் கேரள மக்களைக் கொண்டுவர கேரள அரசு 44 விமானங்களை ஏற்பாடு செய்திருக்கும்போது, தமிழர்களை அழைத்துவர தமிழ்நாடுஅரசு ஏன் ஒரு விமானத்தைக்கூட  இன்னும் ஏற்பாடு செய்யவில்லை?  தமிழக முதல்வர் கவனத்திற்கு அங்கே பரிதவிக்கும் மக்களின் சார்பில்..
 
ந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் பதில் அளித்தபோது அரபு நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் ஆனால் கேரள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் அரபு நாடுகளில் பணி புரிவதால் அவர்கள் 44 விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை வந்தது என்றும் ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு அரபு நாடுகளில் இல்லை என்றும் அப்படியே இருந்தவர்களும் ஏற்கனவே விமானம் மூலம் தாய் நாடு வந்துவிட்டார்கள் என்றும் பதிலளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது