செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 13 ஜூன் 2020 (14:34 IST)

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கோடைக் காலம் முடிந்து தென்மேற்குப் பருவகாலம் தற்போது நிலவுவதால் தமிழகத்தில் பல இடங்களில்  லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது.
 
இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் கோவை, நெல்லை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதிகளில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.