திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (18:40 IST)

4 தொகுதிகள், தனிச்சின்னம் இவற்றில் உறுதியாக உள்ளோம்: திருமாவளவன் பேட்டி..!

thirumavalavan
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நான்கு தொகுதிகள் மற்றும் தனிச் சின்னம் ஆகியவற்றில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 
 
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தையை நடத்திவரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு தொகுதிகள் கேட்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதில் மூன்று தொகுதிகள் தனி தொகுதிகள் என்றும் ஒரு தொகுதி பொதுத் தொகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
பொது தொகுதி கேட்பது என்பது புதிதல்ல என்றும் ஏற்கனவே நாங்கள் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு உள்ளோம் என்றும் கூறியது திருமாவளவன் இந்த முறை நான்கு தொகுதிகளில் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் சின்னத்தைப் பொருத்தவரை பானை சின்னத்தில் ஏற்கனவே நாங்கள் போட்டியிட்டு நான்கு எம்எல்ஏ வைத்திருக்கிறோம் என்றும் அதனால் சின்னத்தை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றும் நான்கு தொகுதிகள் மற்றும் பானை சின்னம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran