1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (16:25 IST)

2024- 25 பட்ஜெட்டில் துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு விவரம்!

MK Stalin
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
 
இந்தப் பட்ஜெட்டில் துறைரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களை பார்க்கலாம்.
 
அதில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 25,858 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.
 
*மகளிர் நலன் , சமூக நலத்துறைக்கு ரூ.13720 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44 ,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
*மருத்துவத்துறைக்கு ரூ.20198 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
*உயர்கல்வித்துறைக்கு ரூ.8212 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
*ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுத்துறைக்கு ரூ.3706 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
*தமிழ்நாடு போக்குவரத்துறைக்கு ரூ.6371 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
*தொழில்துறைக்கு ரூ.1557 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
*சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.1429 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.