புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (12:37 IST)

குடியுரிமை சட்டம்: கோலம் போட்டார் திருமாவளவன்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்கள் சிலர் கோலம் போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கல்லூரி மாணவிகள் உள்பட இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் திடீரென விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக திமுக தலைவர்களின் இல்லங்களின் வாசல்களில் குடியிருப்பு சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்கள் போடப்பட்டு வருகின்றன 
 
கோலங்கள் மூலம் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலம் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவருக்கு அங்கு உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் கோலம் போட உதவி செய்தனர்
 
ஒரு கட்சியின் தலைவரே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக களத்தில் இறங்கி கோலம் போட்டதை பெரும் ஆச்சரியத்தோடு அந்த பகுதி மக்கள் பார்த்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய திருமாவளவன் ’நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என்றும் குடியுரிமை சீர்திருத்த சட்டம் தேச நலனுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்