வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (16:26 IST)

பாமக இன்னொரு பாஜகவாக மாறிக்கொண்டிருக்கிறது… திருமா வளவன் பிரச்சாரம்!

திருமாவளவன் கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 6 தொகுதிகளை பெற்றுள்ளார். தன் கட்சி வேட்பாளர்களுக்காக மட்டுமில்லாது கூட்டணிக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ராதா கிருஷ்ணன் மற்றும் திட்டக்குடி திமுக வேட்பாளர் கணேசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ‘இப்போது இருக்கும் அதிமுக எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து அதிமுக இல்லை. இப்போது நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்குதான் செல்லும். அதேபோல பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போடும் வாக்குகளும் பாஜகவுக்குதான் செல்லும். பாமக கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவாக மாறி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மாம்பழமும், இரட்டை இலையும் பாஜகவின் சின்னமே. ’ எனக் கூறியுள்ளார்.