திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (09:43 IST)

”நான் ஏன் முதல்வரை சந்தித்தேன்?” விளக்கமளிக்கும் திருமா

சென்னையில் முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன், உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முறையாக கிடைத்து உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சென்னை தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.