திருக்குறள் பேரவை அலுவலகத்தில் காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் விழா
கருவூர் திருக்குறள் பேரவை அலுவலகத்தில் நேற்று காலை தேசப்பிதா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் தலைமையில் ஓதுவார் செகந்நாதன் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை இசை யொடு பாடினார் சீனிவாசபுரம் ரமணன் லெட்சுமி நாராயணன் திருமூர்த்தி, ராஜா உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். காந்தியின் சுய சரிதை நூல் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.