கொள்ளையடித்த பணத்தில் பங்கு கேட்ட போலீஸ்: காட்டிக் கொடுத்த முருகன்!
பஞ்சாப் வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் காவலர்களுக்கு பங்கு கொடுத்ததாக முருகன் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. இந்த வழக்கில் திருவாரூர் முருகன், சுரேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் முருகனை காவலில் எடுத்து சமயபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக இரண்டு காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக முருகன் வாக்குமூலம் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முருகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தபட்ட காவல் அதிகாரிகளை ஜனவரி 3ம் தேதிக்குள் ஆஜராகுமாறு சமயபுரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.