1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (13:24 IST)

சீமானை பழிப்பது குறையாது - இனி கழிப்பது இயலாது..! வைரமுத்து ட்விட்..!

Vairamuthu
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19% வாக்குகளை பெற்றது. இதன் மூலம் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது.
 
இந்நிலையில் தனது  சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
ஆலின் விதையொன்று
தனித்து நின்று
ஓசையின்றித் துளிர்விடுவதும்
இலைவிடுவதும்போல
சீமானின் வளர்ச்சி
கவனம் பெறுகிறது
 
இந்த வளர்ச்சியால்
தமிழ்நாட்டு அரசியலில்
அவரைப்
பழிப்பது குறையாது
ஆனால் இனி –
கழிப்பது இயலாது
 
வாழ்த்துகிறேன் என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.