1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூன் 2024 (19:11 IST)

பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.. சீமான்

பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் வாங்கி மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 
 
இதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் ஏற்கனவே தளபதி விஜய் தனது சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் சீமான் கட்சியின் இந்த சாதனை குறித்து கேள்வி எழுப்பியபோது ’சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த பாராட்டு குறித்து சீமான் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது:
 
நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி..!
 
 
Edited by Siva