வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (09:17 IST)

திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது?

திரையரங்கு உரிமையாளர்கள் சில கோரிக்கைகளுடன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளனர். 
 
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.  இதனைத்தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 
 
ஆனால், தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. இதற்கு விடையளிக்கும் விதமாக திரையரங்கு உரிமையாளர்கள் சில கோரிக்கைகளுடனும், சில உறுதிமொழிகளுடனும் முதல்வரை சந்திக்க இருக்கிறார்கள். எனவே விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.