இந்த முறையாவது திரையரங்கள் திறக்கப்படுமா? – அடுத்த கட்ட தளர்வுகள்!
கொரோனா காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் மாதம்தோறும் மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இன்னமும் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்க கோரி திரைத்துறையினர் கேட்டு வந்த நிலையில் கடந்த 28ம் தேதி முதல்வர் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் அதில் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.