செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (20:51 IST)

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த ஆன்மீக பூமியான வடலூர் பெருவெளியில், வள்ளலார் தோற்றுவித்த தர்ம சாலை மற்றும் சத்திய ஞான சபை அமைந்துள்ளது.
 
மாதந்தோறும் ஜோதி தரிசனம் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு தமிழக மட்டுமில்லாமல், பிற மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, ஜோதி தரிசனத்தை கண்டு செல்கின்றனர்.
 
இந்நிலையில் வள்ளலார் பெருவெளியை, குப்பைகள் கொட்டும் கிடங்காகவும், இறைச்சி கழிவுகள், ஹோட்டல் கழிவுகளை கொட்டும் கூடாரமாகவும்,  வடலூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக மாற்றி வருவதாக வள்ளலார் பக்தர்கள் மற்றும் வடலூர் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று வள்ளலார்  158 -வது ஆண்டை கொண்டாடும் விதமாக, வள்ளலார் பெருவெளியில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள் நடைபெற்று வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் தங்களது நகராட்சி வண்டியில் மூலம்,  குப்பைகளை கொண்டு வந்து வடலூர் பெருவெளியில் கொட்ட முற்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தொடர்ச்சியாக இது போல் நடைபெறும் குப்பை கொட்டும் நகராட்சி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல்,  இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதினால்,  உடனடியாக மாவட்ட நிர்வாகம்  லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்ற வள்ளலார் பெருவெளியில், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டும் நகராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளலார் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.