சிலையிடம் சில்மிஷம் செய்தவர் கைது
திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டவர், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டி பிடிப்பது போல் ஆபசமான போஸ் கொடுத்து படம் பிடித்திருக்கிறார். அதை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்ததும் அதை பார்த்த பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஒரு நபர் கொடுத்த புகாரை அடுத்து போலீஸார் முஜிபுர் ரஹ்மானை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.