1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (13:18 IST)

இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவம்..! ஜி கே வாசன் விமர்சனம்..!!

gk vasan
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நீடிக்கிறது என்று அந்த கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பாஜக தேர்தல் குழுவினர் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  ஜி.கே வாசன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமாக நீடிக்கிறது என்றார்.
 
எங்கள் கட்சி சார்பில் தேர்தல் குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும், பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.
 
தேசப்பற்று உடைய கட்சிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பது தமாகாவின் விருப்பம் என்றும் ஜி கே வாசன் கூறினார். 
 
இந்தியா கூட்டணி என்பது முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது என்றும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றும் ஜி.கே வாசன் குற்றம் சாட்டினார். மத்தியில் நல்லாட்சி அமையவும், நாடு மேலும் வளர்ச்சியடையவும் மூன்றாவது முறையாக பாஜகவை வெற்றி பெற செய்து, மோடியை பிரதமராக வேண்டும் என்பதே தமாகாவின் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.

 
 
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது என்று குற்றம்சாட்டிய அவர்,  போதைப் பொருளால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.