ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (10:45 IST)

ஒரு தொகுதியை கேட்டுள்ளோம்..! எந்த தொகுதி ஒதுக்கினாலும் வெற்றி பெறுவோம்.! ஜவாஹிருல்லா..

Jawaraulla
மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தி உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி ஆர் பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வருகிற மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, திமுகவுடன் 2013 ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருவதாகவும்,  2021 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும்  வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
 
அதன் அடிப்படையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று திமுக குழுவிடம் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் வெற்றி பெறுவோம் என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
 
இந்திய கூட்டணி மிக வலுவாக செயல்பட்டு வருகிறது என்றும் இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இல்லை என்றும் அவர் கூறினார்.  இந்தியா கூட்டணி வலுபெற முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்த அவர், மாநில உரிமைகளை பறிக்கும் பாஜகவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

 
இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவாக செயல்படும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.