டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு எவ்வளவு? முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த குழு!
சமீபத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர்கள் குழு நியமனம் செய்யப்பட்டது
இந்த அமைச்சர்கள் குழு தற்போது பயிர் பாதிப்பு குறித்த அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது. நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்து இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது